ஞாயிறு, 26 அக்டோபர், 2014

                  ஓம் .....
           
             தள்ளுபடி ..தள்ளுபடி !
ஆயுத பூஜை சமயத்தில்
ஆன்லைனில் ஒரு அசத்தல்
தள்ளுபடியோ தள்ளுபடி விற்பனை
அடியேனும் ஜோதியில் .....
கணிணி அறிவோ கம்மி
ஆன்லைன் அறிவு அதைவிட
இருந்தாலும் என்ன ..........
தட்டு தடுமாறி ,திக்கி திணறி ,
அடிபட்டு , மிதிபட்டு ,
ஆர்டர் ஒன்றை கொடுத்தாச்சு
அசசரி ஒன்றுக்கு .
ஆர்டர் கொடுத்த ஐந்தாம் நாள்
அழகான பார்சலில் வந்தேவிட்டது
அயிட்டம் .......
நாய் பெற்ற தெங்கம் பழம் கணக்காய்
உருட்டி ,புரட்டி ,கிழித்து ,குதறி ,
உருப்படி உபயோகமானது தானா
பார்க்காமல் விடுவோமா ?
பார்த்தாச்சு , பார்த்தாச்சு .
உபயோகம்தான் ....
பத்து நாள் கழிச்சு ,...!
தீபாவளிக்காக வந்த இடத்தில்
அசசரியை உபயோகிக்க வேண்டி..
அல்லாடும்போது தான் ,,,
ஐந்து வருட ஆயுளுடன் வெளியிடப்பட்ட
அசசரிக்கு ஆயுள் இன்னும்
ஐந்து மாதம்தான் என்பது ......
ஐம்பது சதம் தள்ளுபடிக்கு ஆசைப்பட்டு
என்னைப்போல் அறிவாளி யாருமுண்டோ ?
வாழ்க தள்ளுபடி !
வளர்க தள்ளுபடி மோகம் !!!

வியாழன், 23 அக்டோபர், 2014

தீபாவளி வாழ்த்து

அலைபேசி தொலைபேசி என்றில்லை
அன்பளிபுகளுடன் நேரிலும்
தீபாவளி வாழ்த்துக்களை
விதம் விதமாய் பகிர்ந்து கொண்டோம்
ஆனால் .......
நாளைய நம் தேவைகள் ,வேலைகள் எதையும்
மனதில் கொள்ளாமல்......... முழு
மனதுடன் பகிர்ந்துகொண்டவை எதனை சதம் ? 

புதன், 15 அக்டோபர், 2014

இனிய சிநேகிதமே ....

இரண்டாம் நாள் பதிவே மனவருத்தத்துடன் எழுத வேண்டியுள்ளது ..
மிகவும் நேசித்த ஒரு ஆன்மா இப்போது இல்லை என ....
கேள்வியுறும்போது .....


சாந்தி ..சாந்தி ...சாந்தி ....

நில அளவை ..சில விபரங்கள் ..


                                                                  ஓம் நமச்சிவாய .முதற் புள்ளி வைத்துவிட்டேன்
இனி கோலம் போடுவது ஒன்றும் சிரமமில்லை .
இப்போதைக்கு இது போதும்
இதில் மட்டுமில்லை வாழ்வில் எதிலும்
இபோதைக்கு இது போதும் என்று நினைத்துவிட்டால்
இன்னல் எப்போதும் இல்லை .