ஞாயிறு, 27 டிசம்பர், 2015

வெள்ளி, 25 டிசம்பர், 2015

சித்த வைத்தியன்: சின்னச்சின்ன அக்கறைகள்

சித்த வைத்தியன்: சின்னச்சின்ன அக்கறைகள்: சி ன்னச்சின்ன அக்கறைகள், பல நேரங்களில் நம்மை பெரும் ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் என்பதை, நம் தமிழ்ச் சமூகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே...

வியாழன், 17 டிசம்பர், 2015

வகுப்பறை: நகைச்சுவை: சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்த...

வகுப்பறை: நகைச்சுவை: சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்த...: நகைச்சுவை: சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்? நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பார்க்கவும். சென்னை வாசகர்கள், குறிப்ப...

வியாழன், 3 டிசம்பர், 2015

வகுப்பறை: அதிர்ச்சியளிக்கும் உண்மை: என்ன நடக்கிறது இங்கே? கே...

வகுப்பறை: அதிர்ச்சியளிக்கும் உண்மை: என்ன நடக்கிறது இங்கே? கே...: அதிர்ச்சியளிக்கும் உண்மை: என்ன நடக்கிறது இங்கே? கேட்க ஆளில்லையா? அதிர்ச்சியளிக்கும் உண்மை..!! படித்து பிறருக்கும் பகிருங்கள்.. அரசின...

வியாழன், 12 நவம்பர், 2015

வகுப்பறை: Humour: நகைச்சுவை: சனி விடுமா? விடாதா?

வகுப்பறை: Humour: நகைச்சுவை: சனி விடுமா? விடாதா?: Humour: நகைச்சுவை: சனி விடுமா? விடாதா? நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள்! ---------------------------------------------------...

ஞாயிறு, 8 நவம்பர், 2015

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
அதிகாலை எழுந்திருங்கள்
கங்கா ஸ்நானம் செய்திடுங்கள்
ஆண்டவன் தரிசனம் செய்திடுங்கள்
அன்பானவர்களை சந்தியுங்கள்
அன்பையும் ,அறுசுவை பண்டங்களையும்
அழகாய் பகிர்ந்திடுங்கள்
அளவோடு வெடிகளை
அதிக எச்சரிக்கையாக வெடித்திடுங்கள்
சிறப்பு நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டையும்
சிரிக்க சிரிக்க ரசித்திடுங்கள்
ஆக மொத்தம்
ஒவ்வொரு வருடம் போல
அன்பான
அழகான
அமைதியான
தித்திக்கும் தீபாவளியாக
அமைந்திட
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ... 

திங்கள், 2 நவம்பர், 2015

கடவுளே நான் என்ன செய்து விட்டேன்னு நன்றியெல்லாம் சொல்லி ....
நல்லா யோசிச்சு பாத்தா ரெண்டே ரெண்டு க்ளிக் தான் ....இதுக்கு போயி ...
நடு வீதில நிர்வாணமாக நிக்கிற மாதிரி .......போங்கங்க ....

@  @ @ @ @ @
ஆனா நெறையா இருக்குங்க .....
நிச்சயம் இங்க வரும் ....
அந்த நாள் ....
நாளையாகவே இருக்க ....
என் மனமும் ...
என் மனையும் ....
எல்லாம் வல்லஇறையும் ...
?  ?  ?
......................................................................................................................................................

ஞாயிறு, 1 நவம்பர், 2015

தேன் மதுரத் தமிழ்!: லட்சம் பதிவுகள் கண்ணோடு

தேன் மதுரத் தமிழ்!: லட்சம் பதிவுகள் கண்ணோடு: பதிவர் யாவருக்கும் நண்பர் பதிவில் தவறாது இவர்கருத்து வலைச்சித்தர் தொழில்நுட்ப வித்தகர் வலையுலகம் வியக்கும் உழைப்பாளி பணிகளில் சுழன்ற...

சனி, 31 அக்டோபர், 2015

வகுப்பறை: இந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம் என்று எதற்காகச்...

வகுப்பறை: இந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம் என்று எதற்காகச்...: இந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம்  என்று எதற்காகச் சொன்னார் அவர்? திருமண் (திருநாமம்) வைணவர்களால் இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ மத...

வகுப்பறை: அவ்வப்போது எதை அணிய வேண்டும்?

வகுப்பறை: அவ்வப்போது எதை அணிய வேண்டும்?: அவ்வப்போது எதை அணிய வேண்டும்? அவ்வப்போது எதை அணிய வேண்டும்?  வான்ஹுசைன் சட்டை, கே.ஜி டெனிம் பேன்ட். 4 சவரன் தங்கத்தில் கைக்கு ஒரு ப...

வெள்ளி, 16 அக்டோபர், 2015

நான் ஒரு முட்டாளுங்க

ஆமாங்க நான் ஒரு முட்டாள் தானுங்க ,
தமிழகத்தின் மருத்துவ மாநகரத்தில் உள்ள ஒரு பெயர் பெற்ற மருத்துவ மனையில் இரண்டரை வருடங்களுக்கு முன் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் .அதெல்லாம் புத்திசாலித்தனம் தான் .
ஒன்றும் பிரச்சினை இல்லைதான் ,இருந்தாலும் ஒரு முறை பரிசோதனை செய்துகொண்டு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று நேற்று போயிருந்தேன் .அதுகூட புத்திசாலித்தனம் தான் .
பதிவு செய்து காத்திருந்து அழைத்து பணம் கட்டிட்டு  எக்ஸ் ரே எடுத்து வாங்க என்று மருத்துவரின் பரிந்துரை படிவம் கொடுத்தார்கள் .அருகிலுள்ள பணம் செலுத்துமிடத்தில் பணம் செலுத்தியவுடன் ரசீது கொடுத்தார்கள் .அதை பார்த்த எனக்கு குழப்பம் .ஏனென்றால் எனக்கு வலது இடுப்பு எலும்பில் விரிசல் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் .ஆனால் ரசீதில் இரண்டு பக்க இடுப்பு எலும்புக்கும் படம் எடுக்க வசூலிக்கப்பட்டிருந்தது .
நான் முட்டாளாக வேண்டிய தருணம் அப்போது ஆரம்பம் .செவிலியரிடம் எனக்கு வலது பக்கம்தானே சிகிச்சை செய்யப்பட்டது ,இரண்டு பக்கமும் எதற்கு எடுக்கவேண்டும் என்று கேட்டேன் .அவர் டாக்டர்தான் எழுதியிருக்கிறார் அவரிடம்தான் கேட்கவேண்டும் என்று சொல்லிவிட்டார் .நான் பரிந்துரை படிவத்தை மீண்டும் பார்த்தேன் .அதில் வலது இடுப்பு என்று மூலவர் (பெரிய டாக்டர் )எழுதியிருக்க இடைப்பட்ட இளைய டாக்டர் அதில் திருத்தம் செய்திருக்கிறார் என்றும் தெரிந்தது .செவிலியரிடம் டாக்டரை பார்க்கவேண்டும் என்றேன் .அவரும் இளைய மருத்துவரிடம் அழைத்துசென்றார் .டாக்டரிடம் எதற்கு தேவையில்லாமல் இரண்டு பக்கமும் எடுக்கவேண்டும் என்று கேட்டேன் .தேவையா இல்லையா என்று எங்களுக்கு தெரியும் ,தேவையில்லை என்று உங்களுக்கு தோன்றினால் ஒருபக்கம் மட்டும் எடுத்துகொள்ளுங்கள் என்றார் .சரி ஒரு பக்கம் போதும் என்று பணம் கட்டிய இடத்தில் ரசீதை கொடுத்தபோது கிடைத்த பதில்தான் என்னை முட்டாள் ஆக்கியது .இரண்டு படம் எடுக்கவும் ,ஒரு படம் எடுக்கவும் ஒரே கட்டணம்தான் என்று ரசீதில் இரண்டு பக்கம் என்பதை வலது பக்கம் என்று மட்டும் திருத்தி கொடுத்துவிட்டார்கள் .
அப்புறம் வேறு ஏதாவது பேச முடியுமா ?? பேசாமல் இரண்டு படம் எடுத்திருக்கலாம் ...

புதன், 7 அக்டோபர், 2015

புறப்படுவோம் புதுக்கோட்டை நோக்கி! வாரீர்! வாரீர்!! | அகச் சிவப்புத் தமிழ்

புறப்படுவோம் புதுக்கோட்டை நோக்கி! வாரீர்! வாரீர்!! | அகச் சிவப்புத் தமிழ்

பதிவர் சந்திப்பு ....

அல்லாருக்கும் வணக்கங்க ,
புதுகை பதிவர் சந்திப்பு பற்றி பதிவுலகில் இருக்கற அல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் ...
அதுக்காக எத்தன ஜாம்பவான்கள் எத்தன நாளா எவ்ளோ கஷ்டப்பட்டு என்னெனவோ வேலைகள் செஞ்சுகிட்டு இருக்காங்க ,
நம்ம வீடு விசேஷம் கூப்டா என்ன கூப்டாட்டி என்ன ?சும்மா போய் பாக்கலாம் ..அப்பத்தான் நமக்கும் ஒரு ஈடுபாடு வரும்கறேன் ...
என்ன அல்லாரும் போலாமா ?

சனி, 29 ஆகஸ்ட், 2015

இனி தவிர்க்க முடியாது போல ,

படிப்பதற்கு முன் ...
இது எனக்கே எனக்காக நானே எழுதிக்கொண்டது ..
இதைப்  படிப்பதால் பயனென்ன என்ற கேள்வி எழுந்தாலோ அல்லது நேர விரயம் என்று தோன்றினாலோ கம்பெனி பொறுப்பல்ல ...

திருப்பதியிலிருந்து திரும்பி வரும்போது நீண்ட நாட்களாக சேலம் கரூர்
பயணிகள் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள  சந்தர்பம் கிடைத்தது  ,...
சந்தர்பம் கிடைத்ததே பெரிய விஷயம்......... ,எப்படிஎன்றால் ?
பெரும்பாலான பயணங்கள் ஞாயிறுகளில் அமைவதால் ,அன்று பயணிகள் ரயில் விடுமுறையில் இருக்கும் .அப்படியே வார நாட்களில் வந்தால் நாங்கள் வரும் விரைவு வண்டி வழக்கம்போல் தாமதமாக வந்து பயணிகள் ரயிலை பிடிக்கமுடியாமல் போய்விடும் ...அப்படியே சரியானநேரத்தில் வந்தாலும் மூன்றாவது நடை மேடையிலிருந்து பயண சீட்டு அலுவலகம் சென்று பயண சீட்டு வாங்கி வந்து இரண்டாவது நடை மேடையிலுள்ள பயணிகள் வண்டியைப் பிடிக்க நேரம் போதாமையும் ஒரு காரணமாக அமைந்துவிடும் .

இன்று வழக்கத்தை மீறி எல்லாம் சரியாக இருந்தது ..
ஒரு புதிய அனுபவத்திற்கு ...?
விரைவு வண்டியிலிருந்துஇறங்கிய பின் பயணிகள் வண்டிக்கு இருபது நிமிடங்கள் இருந்தது . மூன்றாவது நடைமேடையிலிருந்து பயணச்சீட்டு வாங்க செல்லும்போதுதுணைவியாரை  இரண்டாவது நடைமேடையில் 
காத்திருக்கச்சொன்னபோது ..........
வேண்டாம் அது எதற்கு இங்கே .....
இருவரும் சென்று பயணச்சீட்டு வாங்கி வந்து வண்டியில் அமரும்போது புறப்பட இரண்டு நிமிடங்கள் இருந்தது ..
&&&&&&&&&&&
நாமக்கல் ரயில் நிலையத்தில் இறங்கியாச்சு .
இரயில் நிலையத்திலிருந்து குறுக்கே நடந்தால் வீடு இரண்டு கிலோமீட்டர் .பேருந்து நிலையம் ஒரு கிலோமீட்டர் .பேருந்து நிலையம் அருகில் அலுவலகத்தில் மொபைக் இருக்கிறது .பிரச்சினை பேருந்து நிலையம் செல்வதுதான் ...
பொதுவாக அணைத்து இரயில்  நிலையங்களும் பேருந்து நிலையத்துடன் மிக நல்ல முறையில் போக்குவரத்து வசதிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் .நாமக்கல் இரயில் நிலையம் தவிர ....
இரயில் நிலையத்திலிருந்து பத்து நிமிடம் போல் நடந்து பிரதான சாலை வந்து நிறுத்தத்தில் நின்றோம் ...ராசிபுரத்திலிருந்து சுமார் ஐம்பது நிறுத்தங்களில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி வரும் தனியார் பேருந்துகள் இரயில் நிலைய நிறுத்தம் வரும்போது பிரேக்கின் மீது கால் வைக்காமலும் எரிபொருள் விடுவிப்பானை அழுத்தியும் மிக வேகமாக நகரம் நோக்கி செல்ல ...அருகில் வந்த ஆட்டோ அநியாய கட்டணம் கேட்க ...
இனி பயணிகள் இரயிலை நினைப்பீர்களா என துணைவியார் கண்ணால் கேட்க ,(அட நிஜந்தாங்க இந்த வயதிலயும் கண்ணால் பேசுவது எங்களுக்குள் சகஜம் .)
ஒருவழியாக இருபது நிமிட காத்திருப்புக்கு பின்னேர் வந்த சிற்றுந்து என்னை (எங்களை )காப்பாற்றியது .
வீடு திரும்பினோம் .
சரி சரி இதெல்லாம்எதற்கு எழுதினேன் ?
1 .நாமக்கல் இரயில் நிலையம் ஏன்  தீவாக உள்ளது ?
2 .அதிக வண்டிகள் இல்லாவிட்டாலும் வண்டி வரும் நேரங்களில் போக்குவரத்து இணைப்பை உறுதி செய்யவேண்டியது யார் ?
இன்னும் இது தொடர்பாக நிறைய கேள்விகள் என்னுள் ...

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...! | திண்டுக்கல் தனபாலன்

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...! | திண்டுக்கல் தனபாலன்

புதன், 5 ஆகஸ்ட், 2015

வகுப்பறை: நகைச்சுவை: இன்றைக்கும் இட்லியா?

வகுப்பறை: நகைச்சுவை: இன்றைக்கும் இட்லியா?: நகைச்சுவை: இன்றைக்கும் இட்லியா? அதாவது, இன்றைக்கும் நகைச்சுவையா? ஆமாம் சாமி ஆமாம்! --------------------------------------------------...

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

வகுப்பறை: நகைச்சுவை: அடப்பாவி மனுஷா! வேறென்னத்தைச் சொல்வது?

வகுப்பறை: நகைச்சுவை: அடப்பாவி மனுஷா! வேறென்னத்தைச் சொல்வது?: நகைச்சுவை: அடப்பாவி மனுஷா! வேறென்னத்தைச் சொல்வது? படித்துப் பாருங்கள். மொழிமாற்றம் செய்தால் ஒரிஜினலில் உள்ள கிக் மிஸ்ஸாகிவிடும். ஆகவே ...

சனி, 6 ஜூன், 2015

வகுப்பறை: விசித்திரங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!

வகுப்பறை: விசித்திரங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!: விசித்திரங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்! 1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், ...

புதன், 21 ஜனவரி, 2015

139


திருப்தி பாலாஜி கவனத்திற்கு....

கொஞ்ச நாட்களாகவே திருமலையிலும் ,சார்ந்த இடம் மற்றும் நிகழ்வுகளிலும் தமிழ் விலக்கபடுகிறதோ என எனக்குள் ஒரு உறுத்தல் .
தவறாகவும் இருக்கலாம் .
****************
சமீப காலமாக திருமலை பணியாளர்களிடம் ஒரு நல்ல ?...........
ஐம்பது ருபாய் தங்குமிடத்திற்கு அறுபது ரூபாய்க்கு மேல் இனாமாக ,
பாலாஜியின் ஊழியர்கள் கெஞ்சும்போது ,கேட்கும்போது மனம் வலிக்கிறது ..
**************
திருமலைக்கு செல்பவர்களை புகைவண்டி நிலையத்திற்கு எதிரில்
விஷ்ணு நிவாசத்தில் பயண சீட்டு மையத்துடன் வரவேற்கும்
போக்குவரத்து துறை ,திருமலையிலிருந்து திரும்பும் பயணிகளை புகைவண்டி நிலையத்தில் சேர்க்க ஆவண செய்தால் நன்றாக இருக்குமே .
*******************

புதன், 14 ஜனவரி, 2015

                   * பொங்கல் நினைவுகள் *
அரை டிராயர் காலம்தான் ஆனாலும் அந்த நினைவுகள் ...
நான் தினமும் மேய்க்கும் மாட்டை மட்டும் நான் கழுவேவேன்
தம்பி மேய்க்கும் மாட்டை நான் கழுவ மாட்டேன் என்பதில்
ஆரமிபிக்கும் பொங்கல் கலகலப்பு .கொம்புகளுக்கு சாயம்
பூசுவதில் ,பலூன் ஊதி கட்டுவதில் ,புதிய கயிறு கட்டுவதில் ,
தொடர்ந்து பூஜை முடிந்ததும் யார் மாட்டுக்கு முதலில்
பொங்கல் ஊட்டுவது என்று வளர்ந்து மாலையில் ஊரில் உள்ள அனைத்து மாடுகளுடன் ஊர்வலம் விடுவதில் தம்பியுடன் ,நண்பர்களுடன்
போட்டி என்று முடிந்து இரவில் அம்மாவின் அருகில் படுத்துக்கொண்டு
அன்றைய பொங்கல் நிகழ்வுகளை அசை போட்டு ஆனந்தபடுவதில்
நல்லவேளை அப்பொழுது தொல்லைகாட்சி பெட்டிகள் இல்லை ..

திருப்தி பாலாஜியின் கவனத்திற்கு ...

நீண்ட நாள் கனவு
நிறைவேறியது இன்று
ஆம் ,
புத்தக காட்சியில் நான்
******
சுட்டி விகடன் சார்பில் கொடுக்கப்பட்ட
துண்டு பிரசுரம் மிகவும் உபயோகம் .
*****
குமுதம் அரங்கில் ஒரு இன்ப அதிர்ச்சி
போன வருடத்திற்கு முந்தைய வருட
பொங்கல் மலரும் விற்பனைக்கு இருந்தது .
******
கிழக்கு பதிப்பகம் மேற்கில் இருந்தது
(போல )தோன்றியது .
*****
ஜீ தமிழ் அழகிய படத்துடன்
காலண்டர் வழங்கினார்கள்
ஒரு சந்தேகம் ...மனதுள்
வேறு மதத்தினருக்கு வேறு காலண்டர்
வைத்ருந்தார்களோ ...
*******
உணவகத்தில் போன வருடம்
தண்ணிகூட வைக்கவில்லை
பெரியவர் ஒருவர் புலம்பல்
இந்த வருஷம் இருக்கில்ல ...
*******
ஹி ..ஹி ..ஒரு சுய விளம்பரம்
எங்கள் ஊர்காருக்காக
நடந்த ஒரு சிறிய ஆர்பாட்டத்தில்
அருகில் இருக்க நேர்ந்தது .
******
நம்ம ஆட்டோ அருகில்
வயதான ஒரு தம்பதி
பெரியார் நகர் என்று ஏறி
உட்கார ...
ஆட்டோ ஓட்டுனரின் முகத்தில்
 ஒரு தர்மசங்கடம் .....
அதை மறைக்க முடியவில்லை
முயற்சிக்கவும் இல்லை ...
********