புதன், 21 ஜனவரி, 2015

139


திருப்தி பாலாஜி கவனத்திற்கு....

கொஞ்ச நாட்களாகவே திருமலையிலும் ,சார்ந்த இடம் மற்றும் நிகழ்வுகளிலும் தமிழ் விலக்கபடுகிறதோ என எனக்குள் ஒரு உறுத்தல் .
தவறாகவும் இருக்கலாம் .
****************
சமீப காலமாக திருமலை பணியாளர்களிடம் ஒரு நல்ல ?...........
ஐம்பது ருபாய் தங்குமிடத்திற்கு அறுபது ரூபாய்க்கு மேல் இனாமாக ,
பாலாஜியின் ஊழியர்கள் கெஞ்சும்போது ,கேட்கும்போது மனம் வலிக்கிறது ..
**************
திருமலைக்கு செல்பவர்களை புகைவண்டி நிலையத்திற்கு எதிரில்
விஷ்ணு நிவாசத்தில் பயண சீட்டு மையத்துடன் வரவேற்கும்
போக்குவரத்து துறை ,திருமலையிலிருந்து திரும்பும் பயணிகளை புகைவண்டி நிலையத்தில் சேர்க்க ஆவண செய்தால் நன்றாக இருக்குமே .
*******************

புதன், 14 ஜனவரி, 2015

                   * பொங்கல் நினைவுகள் *
அரை டிராயர் காலம்தான் ஆனாலும் அந்த நினைவுகள் ...
நான் தினமும் மேய்க்கும் மாட்டை மட்டும் நான் கழுவேவேன்
தம்பி மேய்க்கும் மாட்டை நான் கழுவ மாட்டேன் என்பதில்
ஆரமிபிக்கும் பொங்கல் கலகலப்பு .கொம்புகளுக்கு சாயம்
பூசுவதில் ,பலூன் ஊதி கட்டுவதில் ,புதிய கயிறு கட்டுவதில் ,
தொடர்ந்து பூஜை முடிந்ததும் யார் மாட்டுக்கு முதலில்
பொங்கல் ஊட்டுவது என்று வளர்ந்து மாலையில் ஊரில் உள்ள அனைத்து மாடுகளுடன் ஊர்வலம் விடுவதில் தம்பியுடன் ,நண்பர்களுடன்
போட்டி என்று முடிந்து இரவில் அம்மாவின் அருகில் படுத்துக்கொண்டு
அன்றைய பொங்கல் நிகழ்வுகளை அசை போட்டு ஆனந்தபடுவதில்
நல்லவேளை அப்பொழுது தொல்லைகாட்சி பெட்டிகள் இல்லை ..

திருப்தி பாலாஜியின் கவனத்திற்கு ...

நீண்ட நாள் கனவு
நிறைவேறியது இன்று
ஆம் ,
புத்தக காட்சியில் நான்
******
சுட்டி விகடன் சார்பில் கொடுக்கப்பட்ட
துண்டு பிரசுரம் மிகவும் உபயோகம் .
*****
குமுதம் அரங்கில் ஒரு இன்ப அதிர்ச்சி
போன வருடத்திற்கு முந்தைய வருட
பொங்கல் மலரும் விற்பனைக்கு இருந்தது .
******
கிழக்கு பதிப்பகம் மேற்கில் இருந்தது
(போல )தோன்றியது .
*****
ஜீ தமிழ் அழகிய படத்துடன்
காலண்டர் வழங்கினார்கள்
ஒரு சந்தேகம் ...மனதுள்
வேறு மதத்தினருக்கு வேறு காலண்டர்
வைத்ருந்தார்களோ ...
*******
உணவகத்தில் போன வருடம்
தண்ணிகூட வைக்கவில்லை
பெரியவர் ஒருவர் புலம்பல்
இந்த வருஷம் இருக்கில்ல ...
*******
ஹி ..ஹி ..ஒரு சுய விளம்பரம்
எங்கள் ஊர்காருக்காக
நடந்த ஒரு சிறிய ஆர்பாட்டத்தில்
அருகில் இருக்க நேர்ந்தது .
******
நம்ம ஆட்டோ அருகில்
வயதான ஒரு தம்பதி
பெரியார் நகர் என்று ஏறி
உட்கார ...
ஆட்டோ ஓட்டுனரின் முகத்தில்
 ஒரு தர்மசங்கடம் .....
அதை மறைக்க முடியவில்லை
முயற்சிக்கவும் இல்லை ...
********