சனி, 29 ஆகஸ்ட், 2015

இனி தவிர்க்க முடியாது போல ,

படிப்பதற்கு முன் ...
இது எனக்கே எனக்காக நானே எழுதிக்கொண்டது ..
இதைப்  படிப்பதால் பயனென்ன என்ற கேள்வி எழுந்தாலோ அல்லது நேர விரயம் என்று தோன்றினாலோ கம்பெனி பொறுப்பல்ல ...

திருப்பதியிலிருந்து திரும்பி வரும்போது நீண்ட நாட்களாக சேலம் கரூர்
பயணிகள் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள  சந்தர்பம் கிடைத்தது  ,...
சந்தர்பம் கிடைத்ததே பெரிய விஷயம்......... ,எப்படிஎன்றால் ?
பெரும்பாலான பயணங்கள் ஞாயிறுகளில் அமைவதால் ,அன்று பயணிகள் ரயில் விடுமுறையில் இருக்கும் .அப்படியே வார நாட்களில் வந்தால் நாங்கள் வரும் விரைவு வண்டி வழக்கம்போல் தாமதமாக வந்து பயணிகள் ரயிலை பிடிக்கமுடியாமல் போய்விடும் ...அப்படியே சரியானநேரத்தில் வந்தாலும் மூன்றாவது நடை மேடையிலிருந்து பயண சீட்டு அலுவலகம் சென்று பயண சீட்டு வாங்கி வந்து இரண்டாவது நடை மேடையிலுள்ள பயணிகள் வண்டியைப் பிடிக்க நேரம் போதாமையும் ஒரு காரணமாக அமைந்துவிடும் .

இன்று வழக்கத்தை மீறி எல்லாம் சரியாக இருந்தது ..
ஒரு புதிய அனுபவத்திற்கு ...?
விரைவு வண்டியிலிருந்துஇறங்கிய பின் பயணிகள் வண்டிக்கு இருபது நிமிடங்கள் இருந்தது . மூன்றாவது நடைமேடையிலிருந்து பயணச்சீட்டு வாங்க செல்லும்போதுதுணைவியாரை  இரண்டாவது நடைமேடையில் 
காத்திருக்கச்சொன்னபோது ..........
வேண்டாம் அது எதற்கு இங்கே .....
இருவரும் சென்று பயணச்சீட்டு வாங்கி வந்து வண்டியில் அமரும்போது புறப்பட இரண்டு நிமிடங்கள் இருந்தது ..
&&&&&&&&&&&
நாமக்கல் ரயில் நிலையத்தில் இறங்கியாச்சு .
இரயில் நிலையத்திலிருந்து குறுக்கே நடந்தால் வீடு இரண்டு கிலோமீட்டர் .பேருந்து நிலையம் ஒரு கிலோமீட்டர் .பேருந்து நிலையம் அருகில் அலுவலகத்தில் மொபைக் இருக்கிறது .பிரச்சினை பேருந்து நிலையம் செல்வதுதான் ...
பொதுவாக அணைத்து இரயில்  நிலையங்களும் பேருந்து நிலையத்துடன் மிக நல்ல முறையில் போக்குவரத்து வசதிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் .நாமக்கல் இரயில் நிலையம் தவிர ....
இரயில் நிலையத்திலிருந்து பத்து நிமிடம் போல் நடந்து பிரதான சாலை வந்து நிறுத்தத்தில் நின்றோம் ...ராசிபுரத்திலிருந்து சுமார் ஐம்பது நிறுத்தங்களில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி வரும் தனியார் பேருந்துகள் இரயில் நிலைய நிறுத்தம் வரும்போது பிரேக்கின் மீது கால் வைக்காமலும் எரிபொருள் விடுவிப்பானை அழுத்தியும் மிக வேகமாக நகரம் நோக்கி செல்ல ...அருகில் வந்த ஆட்டோ அநியாய கட்டணம் கேட்க ...
இனி பயணிகள் இரயிலை நினைப்பீர்களா என துணைவியார் கண்ணால் கேட்க ,(அட நிஜந்தாங்க இந்த வயதிலயும் கண்ணால் பேசுவது எங்களுக்குள் சகஜம் .)
ஒருவழியாக இருபது நிமிட காத்திருப்புக்கு பின்னேர் வந்த சிற்றுந்து என்னை (எங்களை )காப்பாற்றியது .
வீடு திரும்பினோம் .
சரி சரி இதெல்லாம்எதற்கு எழுதினேன் ?
1 .நாமக்கல் இரயில் நிலையம் ஏன்  தீவாக உள்ளது ?
2 .அதிக வண்டிகள் இல்லாவிட்டாலும் வண்டி வரும் நேரங்களில் போக்குவரத்து இணைப்பை உறுதி செய்யவேண்டியது யார் ?
இன்னும் இது தொடர்பாக நிறைய கேள்விகள் என்னுள் ...

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...! | திண்டுக்கல் தனபாலன்

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...! | திண்டுக்கல் தனபாலன்

புதன், 5 ஆகஸ்ட், 2015

வகுப்பறை: நகைச்சுவை: இன்றைக்கும் இட்லியா?

வகுப்பறை: நகைச்சுவை: இன்றைக்கும் இட்லியா?: நகைச்சுவை: இன்றைக்கும் இட்லியா? அதாவது, இன்றைக்கும் நகைச்சுவையா? ஆமாம் சாமி ஆமாம்! --------------------------------------------------...

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

வகுப்பறை: நகைச்சுவை: அடப்பாவி மனுஷா! வேறென்னத்தைச் சொல்வது?

வகுப்பறை: நகைச்சுவை: அடப்பாவி மனுஷா! வேறென்னத்தைச் சொல்வது?: நகைச்சுவை: அடப்பாவி மனுஷா! வேறென்னத்தைச் சொல்வது? படித்துப் பாருங்கள். மொழிமாற்றம் செய்தால் ஒரிஜினலில் உள்ள கிக் மிஸ்ஸாகிவிடும். ஆகவே ...