சனி, 26 நவம்பர், 2016

கோவிந்தா... கோவிந்தா.

வராகசுவாமியைக் கண்டேன் . *** *** *** *** *** *** *** *** *** ஆமாங்க நிஜமா சொல்றேன் இன்றைக்கு வராகசாமியை (திருமாலின் அவதாரமேதான்)நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்க நம்பலைன்னு தெரியிது,அதுக்காக நான் அப்பல்லோ தலைவர் மாதிரியோ,நம்ப ஜெட்லி மாதிரியோ சேகர் மாதிரியோ,சுவாமி மாதிரியோ சொல்றன்னு நெனைக்கப்படாது. வழக்கம்போல கடைசி சனி ஏழுமலையானை தரிசிக்க(முன்னெல்லாம் திருவோணத்துக்கு வருவோம், நண்பர்கள் கடைசி சனிக்கு வரதால நாமளும் மாறிட்டம்,யார் சொன்னாலும் அப்படியே நம்பற அப்புராணி நாம)அதிகாலை ரயில்ல வந்து இறங்கி விஷ்ணுவாசத்தில் தயாராகி மங்காபுரம் தாயார்,சீரங்கப்பட்டணம் பெருமாள் ஆகியோரை சேவித்து புறப்பட்டேன் திருமலைக்கு ,ஆம் இம்முறை தனியாகத்தான் (ஒவ்வொரு மாதமும் வாழ்க்கைத்துணையும் வழித்துணையாக வருவாங்க,வராகசாமி தரிசனம் அதனால்கூட இருக்கலாம்) புஷ்கரணியில் கைகால் முகம் கழுவி(முன்னெல்லாம் குளிச்சிட்டு உடை மாற்றுவதில்லை,அப்படியே கிளம்பிவிடுவோம் பெருமாளை தரிசிக்கப்போகும்போது உலர்ந்திருக்கும்)அப்படியே சற்றே உள்ளே மரத்தடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானையும் (இன்னைக்கு சனிப்பிரதொஷம் அல்லவா)தரிசித்துவிட்டு வராகசாமி கோவிலை நோக்கி நடக்கிறேன். நான்கு மாட வீதிகளில் காலணி அணிந்து நடக்க வேண்டாம் என்று ஓயாமல்அறிவிக்கிறார்கள், ஆனாலும் வெகுசிலர் காலணியுடன் நடப்பதை பார்க்க மனம் வேதனைப்பட்டது.வராகசாமி கோவிலின் நுழைவாயிலை நெருங்கும்போது கவனித்தேன்,வழக்கமாக தரிசனத்திற்கு ரதவீதியின் நுழைவாயில் வரை வரிசை இருக்கும்,போன மாதம் இன்னும் அதிகம் .ஆனால்இன்றோ கோவிலின் நுழைவாயில் வரை ஒருவரும் இல்லை.பரவாயில்லை விரைவில் தரிசனம் கிடைக்கும் என்று மனதில் நினைத்தவாறே நெருங்கினேன். எனக்கு முன்னர் ஒரு குடும்பம் நுழைவாயில் அருகே, கணவன் மனைவி,12-15 வயதில் ஒரு பையன்,9-12 வயதில் ஒரு பையன் ,... பையன்கள் இருவரும் மேலே ஏறிவிட நின்றிருந்த மனைவியின் அருகே குனிந்தார் கணவர்..... அப்படியே தூக்கிக்கொண்டு கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். எனக்கு முதலில் புரியவில்லை, அந்த பெண்மணி நின்றிருந்ததைப் பார்த்தால் ஊனமுற்றவர் போன்றும் தோன்றவில்லை. ஒரு வேலை வேண்டுதலாக இருக்குமோ? இப்படியுமா வேண்டுதல் வைப்பார்கள்? அதீத அன்பு?ம்ஹூம் பொது இடத்தில் ....இல்லை...இல்லை... அவதாரத்தில் பூதேவியை இப்படித்தான் தூக்கி வந்திருப்பாரோ வராகமூர்த்தி. யார் அந்த அரக்கன் பூமியை கடலுக்கடியில் மறைத்து வைத்தவன்?ஆஹா சரியான நேரத்தில் ஞாபகம் வரவில்லையே.எப்படித்தான் வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற உபன்யாசகர்கள் நினைவு வைத்திருக்கிறார்களோ? எனக்கு தெரிந்த கொஞ்சத்தை நினைவு படுத்த முயன்று கொண்டே அவர்களை பின்தொடர்ந்தேன். ஒரே நிமிடம்தான் ....இரண்டு, மூன்று படிகள் இறங்கி கோயில் உள்ளே நுழைந்தவுடன் அவர் தம் மனைவியை மெதுவாக கீழே இறக்கிவிட்டார். கம்பியை பிடித்துக்கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார் அப்பெண்.லேசான குறைதான் . ........ என் மண்டைக்குள் பளிச்சென ஒரு மின்னல் . கையில் சங்கு சக்கரத்துடன் தலைக்குப்பின்னால் ஒளிவட்டத்துடன் பெருமாள் தோன்றுவார் என்றால் அது சினிமாவிலும்,கதைகளிலும்தான் நடக்கும்,உண்மையில் இறைவன் இப்படித்தான் காட்சி தருவார் போலும். கோவிந்தா...கோவிந்தா... உள்ளம் உருகியது,கண்கள் கலங்கின. மனதுக்குள் அவரை சேவித்தேன். தரிசனத்திற்குப்பின் அவர்களை கடக்க நேர்ந்த்து,அவர் மனைவியுடனும், பிள்ளைகளுடனும் புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தார்.சக மனிதன் கடக்கும்போது ஏற்படும் சாதாரண சலனமாகத்தான் என்மீது பார்வை பட்டு மீண்டது. ஆனால் எங்கே உன் துண என்று கேட்பது போலிருந்த்து. தனியாக வந்ததின் விளைவா? எனக்கென்னவோ இறை தரிசனம் இப்படித்தான் அமையும் என்றே தோன்றுகிறது. ஆஹா..கண்டேன் வராகசாமியை! கோவிந்தா! கோவிந்தா!!

திங்கள், 21 நவம்பர், 2016

வளரும் கவிதை: வலைப்பதிவர் திருவிழா - வேண்டுகோள்!

வளரும் கவிதை: வலைப்பதிவர் திருவிழா - வேண்டுகோள்!: 20-11-2016 காலை,  கணினித்தமிழ்ச்சங்க நிறுவுநர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தலைமையில்  “வலைப்பதிவர் திருவிழா” நடத்துவது பற்றி நடந்த ஆல...