
இனி தவிர்க்க முடியாது போல , படிப்பதற்கு முன் ... இது எனக்கே எனக்காக நானே எழுதிக்கொண்டது .. இதைப் படிப்பதால் பயனென்ன என்ற கேள்வி எழுந்தாலோ அல்லது நேர விரயம் என்று தோன்றினாலோ கம்பெனி பொறுப்பல்ல ... திருப்பதியிலிருந்து திரும்பி வரும்போது நீண்ட நாட்களாக சேலம் கரூர் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள சந்தர்பம் கிடைத்தது ,... சந்தர்பம் கிடைத்ததே பெரிய விஷயம்......... ,எப்படிஎன்றால் ? பெரும்பாலான பயணங்கள் ஞாயிறுகளில் அமைவதால் ,அன்று பயணிகள் ரயில் விடுமுறையில் இருக்கும் .அப்படியே வார நாட்களில் வந்தால் நாங்கள் வரும் விரைவு வண்டி வழக்கம்போல் தாமதமாக வந்து பயணிகள் ரயிலை பிடிக்கமுடியாமல் போய்விடும் ...அப்படியே சரியானநேரத்தில் வந்தாலும் மூன்றாவது நடை மேடையிலிருந்து பயண சீட்டு அலுவலகம் சென்று பயண சீட்டு வாங்கி வந்து இரண்டாவது நடை மேடையிலுள்ள பயணிகள் வண்டியைப் பிடிக்க நேரம் போதாமையும் ஒரு காரணமாக அமைந்துவிடும் . இன்று வழக்கத்தை மீறி எல்லாம் சரியாக இருந்தது .. ஒரு புதிய அனுபவத்திற்கு ...? விரைவு வண்டியிலிருந்துஇறங்கிய பின் ப...