இடுகைகள்

அக்டோபர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பயணம் ............... பொதுவாகவே எனது பயணங்கள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருக்கும்.பெரும்பாலும் முன்பதிவு செய்யப்பட்ட இரயில் பயணங்கள் அல்லது முன்பதிவு செய்யப்பட்ட பேருந்து பயணங்களாக இருக்கும். பணிநிமித்தம் தினமும் அரை மணி நேரம் ,ஒருமணிநேரம் நகரப்பேருந்து மற்றும் அரசு,தனியார் பேருந்துகளில் அமர்ந்தோ,நின்றுகொண்டோ பயணிப்பது வேறு.நான் சொல்ல வந்த்து நீண்டதூர பயணங்கள்.இதிலிருந்தே தெரியும் நான் ஒன்றும் அரசியல்வாதியோ ,அதிகார மையமோ அல்ல ஒரு சாதாரணன் என்பது.    இரயில் பயணம் என்றால் குறைந்த்து அரை மணி முன்னதாக நிலையத்தில் இருப்பேன்,குடும்பத்தோடு என்றால் இருப்போம்.பேருந்து பயணம் என்றாலும் இவ்வாறே. ஒரே ஒரு முறை புதுடில்லி செல்லும் தமிழ்நாடு விரைவு வண்டி சென்னை சென்ட்ரல் முதல் நடைமேடையிலிருந்து புறப்பட்டு நகரத்தொடங்கியிருந்த நேரம் என்னையும் எனது நண்பரையும் அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனர் நிலமையின் தீவிரம் புரிந்து நகர்ந்துகொண்டிருந்த இரயிலின் அருகேயே நடைமேடையில் ஆட்டோவை செலுத்தி எங்களை பயணிக்க வைத்தார்.நல்லவேளையாக அது முன்பதிவு செய்யப்பட்ட பயணம்.     ...