இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சர்வதரிசனம்

நிறைய முறை சுப்ரபாதம், அங்கப்பிரதட்சணம், மூன்று முறை சேவை மற்றும் பலமுறை சிறப்பு தரிசனம் மற்றும் ஒரு முறை சேவையின் போது ஒரு தேவஸ்தான உறுப்பினர் ஒருவரின் தாயாரை அழைத்து செல்ல வேண்டி குலசேகர படிவரை சென்று தரிசனம் செய்ததோடு தீபாராதனை தீர்த்தம் துளசி என சகலமும் பெற்றது பாக்கியம் என்று எனக்கிருந்த தலைக்கணத்தை சுக்கு நூறாக உடைத்துவிட்டான் என் இஷ்ட தெய்வம் வெங்கடேசன். மகன் மருமகள் பேரன்,சம்பந்திகள்,சம்பந்தியின் மகன் மருமகள் பேரன் மற்றும் சம்பந்தி யின் மகன் வழி சம்பந்தி அவரின் மகன் மருமகள் பேரன் ஆகியோர் (11+3) சென்ற வியாழன் மதியம் சின்னசேலத்திலிருந்து இரண்டு கார்களில் புறப்பட்டு இரவு பத்து மணிக்கு திருமலையை அடைந்தோம். வேங்கடாத்திரி நிலையம் அருகில் சில பல நிமிடங்கள் அலைந்து பார்க்கிங் கண்டுபிடித்து இனிதே பார்க் செய்து இரவு உணவு எடுத்துக் கொண்டு வேங்கடாத்திரியில் இரண்டு வாண்டுகளுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு குளியல் பின்னர் இரவு உணவு முடிக்கும்போது மணி 11.   சர்வதரிசனம்தான் என ஏற்கனவே முடிவு செய்து விட்டதால் பேடி ஆஞ்சநேயரை வெளியிலிருந்து தரிசனம் அப்படியே புஷ்கரணி பார்த்து வராக மூர்த...