சர்வதரிசனம்

நிறைய முறை சுப்ரபாதம், அங்கப்பிரதட்சணம், மூன்று முறை சேவை மற்றும் பலமுறை சிறப்பு தரிசனம் மற்றும் ஒரு முறை சேவையின் போது ஒரு தேவஸ்தான உறுப்பினர் ஒருவரின் தாயாரை அழைத்து செல்ல வேண்டி குலசேகர படிவரை சென்று தரிசனம் செய்ததோடு தீபாராதனை தீர்த்தம் துளசி என சகலமும் பெற்றது பாக்கியம் என்று எனக்கிருந்த தலைக்கணத்தை சுக்கு நூறாக உடைத்துவிட்டான் என் இஷ்ட தெய்வம் வெங்கடேசன்.

மகன் மருமகள் பேரன்,சம்பந்திகள்,சம்பந்தியின் மகன் மருமகள் பேரன் மற்றும் சம்பந்தி யின் மகன் வழி சம்பந்தி அவரின் மகன் மருமகள் பேரன் ஆகியோர் (11+3)

சென்ற வியாழன் மதியம் சின்னசேலத்திலிருந்து இரண்டு கார்களில் புறப்பட்டு இரவு பத்து மணிக்கு திருமலையை அடைந்தோம்.

வேங்கடாத்திரி நிலையம் அருகில் சில பல நிமிடங்கள் அலைந்து பார்க்கிங் கண்டுபிடித்து இனிதே பார்க் செய்து இரவு உணவு எடுத்துக் கொண்டு வேங்கடாத்திரியில் இரண்டு வாண்டுகளுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு குளியல் பின்னர் இரவு உணவு முடிக்கும்போது மணி 11.

  சர்வதரிசனம்தான் என ஏற்கனவே முடிவு செய்து விட்டதால் பேடி ஆஞ்சநேயரை வெளியிலிருந்து தரிசனம் அப்படியே புஷ்கரணி பார்த்து வராக மூர்த்தி யையும் ரதவீதியிலிருந்து சர்வதரிசனம் நுழைவு வாயில் பற்றி விசாரிக்க சிலாதோரணம் என தெரிந்தது.

     தொலைவு என கருதி ஒரு வாடகை வண்டியில் சென்று இறங்கினால்..

   ( பார்க்கிங் இடம் தேடும்போதிருந்தே  ஒலிபெருக்கி வாயிலாக வைகுண்டம் மற்றும் நாராயணகிரி அறைகள் அனைத்தும் பக்தர்கள் நிரம்பியுள்ளதால் யாத்ரிநிவாஸில் ஓய்வெடுத்து அதிகாலை ஆறு மணிக்கு வரிசையில் சேர்ந்து கொள்ள அறிவுறுத்தினரக் கொண்டே  இருந்தார்கள்.CRO Office அருகில் விசாரித்தபோதே பாதுகாப்பு அலுவலர் 24 மணி நேரம் என்று இப்பவே மனசுல பதிவு பண்ணிக்குங்க என்று வேறு சொல்லிவிட்டார்)

    நாங்கள் சென்ற போது நிற்கவோ உட்காரவோ இடமில்லாத அளவு ஜனக்கூட்டம். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் காலை ஆறு மணிக்கு வாருங்கள் இப்போது கலைந்து செல்லுங்கள் என்று விரட்டினார்கள்.நேரம் இரவு 12.40.

   தடுப்பு கிரில்களை நகர்த்தி ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார்கள். சற்று நேரம் கழித்து அவர்களில் சிலர் பைக்கில் சென்று விட மீதம் இருந்த இருவரை தூர இருந்தவர் அழைத்துக்கொள்ள பக்த வெள்ளம் மடை திறந்து போல பாய்ந்தது.நாங்களும் அவர்களோடு கலந்து கொண்டோம்.அப்போது நேரம் இரவு ஒரு மணி.

     குழைந்தைகளுடன் என்பதால் பதினான்கு பேரும் கலையாமல் பயணிப்பது ஒரு கடினமான பயணம்.

ஆரம்பமே சற்று மேடான சாலை என்பதால் ஆங்காங்கே சில நிமிடங்கள் ஓய்வு பின்னர் நடை என தங்கு தடையின்றி பயணம்.

   சுமார் இரண்டு மணி அல்லது அதற்கு முன்னர் முன்னேற்றத்தில் தேக்கம்.சில நிமிடங்கள் என நினைத்தோம்.மூன்று மணி அளவில் மின் விசிறிகள் நிறுத்தப்பட்டன.சரிதான் என தோன்றியது.அமரும் வசதிகள் கழிவறை இல்லாத இடம், மிகவும் நெரிசலான மூன்று மணி நேரம்.மடங்கி உட்கார்ந்து அந்த நிலையில் தூங்கி குழந்தைகள் பாடு ரொம்ப கஷ்டப்.அருகில் உள்ளவரிடம் பேசாதீர்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள் சும்மா இருந்து வேங்கடவனை தரிசியுங்கள் என்று அறிவுரை அவ்வப்போது.

என்னதான் வேங்கடவன் பக்தர்கள் என்றாலும் மனிதர்கள் தானே.

ஒரு வழியாக நான்கரை மணிக்கு வேங்கடவனை நோக்கி பயணம் நகர்ந்தது.ஆங்காங்கே சிறிது நேரம் நிற்க வேண்டி இருந்தாலும் வேங்கடவன் கருணையால் காலை ஒன்பது மணிக்கு நாராயணகிரி ஓய்வு கூடம் அடைந்தோம்.

    மூன்று மணி நேர ஓய்வு பின்னர் கூடம் திறக்கப்பட்டது.வாயிலில் இருந்தவர் டோக்கன் பெற்று பின்னர் தரிசனம் தான் என்று தெம்பு கொடுத்தார்.பயணம் தொடர்ந்தது.தேங்கி தேங்கி ஒரு வழியாக டோக்கன் பெற்று ( தரிசனம் நேரம் அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு என பதிவு செய்திருந்தது) வைகுந்தம் தொகுப்பில் எட்டாம் எண் கூடத்தை இரவு ஏழு மணிக்கு அடைந்தோம் . கூடத்திற்கு கீழே அப்படி ஒரு இடம் ஓய்வெடுக்க இருப்பதை தெரிந்து கொள்ள தேவையே ஏற்பட்டதில்லை.

  ஏற்கனவே சொன்னபடி நாங்கள் 11+3 என்பதால் ஒன்று சேர்ந்து பயணிப்பது வேங்கடவன் தரிசனம் கண்டதற்கு சமம்.

   அன்ன பிரசாதம் உண்டு ஒரு தூக்கம் தூங்கி கோவிந்தா கோஷம் கேட்டு கண் விழித்தால் மணி பதினொன்று.

  மீண்டும் ஏழுமலையானை நோக்கி பயணம், எப்போதும் போல குழு பிரியாமல் முன்னேற்றம்.

   இறுதி பரிசோதனையில் மாப்பிள்ளையும் அவர் மாப்பிள்ளையும் கட்டியிருந்த நவீன கடிகாரத்திற்கு அனுமதியில்லை என்று வாங்கி வைத்துக் கொண்டு அனுப்பினார்கள்.( கார் நிறுத்தும் போதே அனைவரின் கைபேசியையும் அனைத்து காரில் வைத்து விட்டுத்தான் வந்திருந்தோம்) தரிசனம் காணும் வரை கைபேசியில் கவனம் செலுத்த வேண்டாமே.

   ஏனோ இறுதி பரிசோதனை இல்லை.எப்போதிருந்து தெரியவில்லை.வெண்டிவாகினியில் கயிறு கொண்டு தேக்கி வைத்து விடுவார்கள்.ஒரே தள்ளுமுள்ளு தான்.ஆனால் இப்போது அப்படியில்லை.உள்நுழைவு சற்று நெருக்கடி இல்லாமல் இருந்தது.முன்பெல்லாம் கல்யாண வெங்கடேசனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.இப்போது அதற்கு வாய்ப்பில்லை.

    காத்திருந்த களைப்பு நெரிசலில் பட்ட வேதனை எல்லாம் நொடியில் தீருமளவிற்கு கருடாழ்வார் சன்னதியில் ஒரு கணம் நமஸ்காரம் பின்னர் கண் குளிர கோவிந்தா கோவிந்தா என்ற சரணத்தோடு பெருமாளை வழிபட சேவாதாரிகள் அவர்கள் பணியை செவ்வனே செய்ய மனநிறைவோடு சன்னதியில் இருந்து வெளிப்பட்டோம்.

    சன்னிதானம் சென்றதோ  தரிசனம் செய்ததோ பெரிய விசயமில்லை.‌

    ‌  விமான வெங்கடேசன் தரிசனமும் உண்டியலை அணுகுவதும் அதன் பின்னர் வெளியேறுவதும்தான் மிகப்பெரிய சவால்.

  சரியாக 24 மணி நேரம் சர்வதரிசனம் முடித்து வெளியே வந்தோம்.

ஓம் நமோ வேங்கடாசாயா..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Honey

மனிதம்.