ஆமாங்க நான் ஒரு முட்டாள் தானுங்க , தமிழகத்தின் மருத்துவ மாநகரத்தில் உள்ள ஒரு பெயர் பெற்ற மருத்துவ மனையில் இரண்டரை வருடங்களுக்கு முன் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் .அதெல்லாம் புத்திசாலித்தனம் தான் . ஒன்றும் பிரச்சினை இல்லைதான் ,இருந்தாலும் ஒரு முறை பரிசோதனை செய்துகொண்டு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று நேற்று போயிருந்தேன் .அதுகூட புத்திசாலித்தனம் தான் . பதிவு செய்து காத்திருந்து அழைத்து பணம் கட்டிட்டு எக்ஸ் ரே எடுத்து வாங்க என்று மருத்துவரின் பரிந்துரை படிவம் கொடுத்தார்கள் .அருகிலுள்ள பணம் செலுத்துமிடத்தில் பணம் செலுத்தியவுடன் ரசீது கொடுத்தார்கள் .அதை பார்த்த எனக்கு குழப்பம் .ஏனென்றால் எனக்கு வலது இடுப்பு எலும்பில் விரிசல் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் .ஆனால் ரசீதில் இரண்டு பக்க இடுப்பு எலும்புக்கும் படம் எடுக்க வசூலிக்கப்பட்டிருந்தது . நான் முட்டாளாக வேண்டிய தருணம் அப்போது ஆரம்பம் .செவிலியரிடம் எனக்கு வலது பக்கம்தானே சிகிச்சை செய்யப்பட்டது ,இரண்டு பக்கமும் எதற்கு எடுக்கவேண்டும் என்று கேட்டேன் .அவர் டாக்டர்தான் எழுதியி...