கோவிந்தா... கோவிந்தா.
வராகசுவாமியைக் கண்டேன் . *** *** *** *** *** *** *** *** *** ஆமாங்க நிஜமா சொல்றேன் இன்றைக்கு வராகசாமியை (திருமாலின் அவதாரமேதான்)நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்க நம்பலைன்னு தெரியிது,அதுக்காக நான் அப்பல்லோ தலைவர் மாதிரியோ,நம்ப ஜெட்லி மாதிரியோ சேகர் மாதிரியோ,சுவாமி மாதிரியோ சொல்றன்னு நெனைக்கப்படாது. வழக்கம்போல கடைசி சனி ஏழுமலையானை தரிசிக்க(முன்னெல்லாம் திருவோணத்துக்கு வருவோம், நண்பர்கள் கடைசி சனிக்கு வரதால நாமளும் மாறிட்டம்,யார் சொன்னாலும் அப்படியே நம்பற அப்புராணி நாம)அதிகாலை ரயில்ல வந்து இறங்கி விஷ்ணுவாசத்தில் தயாராகி மங்காபுரம் தாயார்,சீரங்கப்பட்டணம் பெருமாள் ஆகியோரை சேவித்து புறப்பட்டேன் திருமலைக்கு ,ஆம் இம்முறை தனியாகத்தான் (ஒவ்வொரு மாதமும் வாழ்க்கைத்துணையும் வழித்துணையாக வருவாங்க,வராகசாமி தரிசனம் அதனால்கூட இருக்கலாம்) புஷ்கரணியில் கைகால் முகம் கழுவி(முன்னெல்லாம் குளிச்சிட்டு உடை மாற்றுவதில்லை,அப்படியே கிளம்பிவிடுவோம் பெருமாளை தரிசிக்கப்போகும்போது உலர்ந்திருக்கும்)அப்படியே சற்றே உள்ளே மரத்தடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானையும் (இன்னைக்கு சனிப்பிரதொஷம் அல்லவா)தரிசித்து