மனிதம்.
ஒரு நிமிசம் இதை படிங்களேன். ********************************** நீண்ட தூரமோ"குறைந்த தூரமோ நாம எல்லோரும் தினசரி அல்லது அடிக்கடி பேருந்தில் பயணம் செய்வது தவிர்க்க முடியாத அளவுக்கு காலம் அதன் சுழற்சியில் இழுத்து செல்கிறது. எந்த பேருந்தா இருந்தாலும் நாம ஏறியவுடன் இரண்டு பேர் இருக்கையோ"மூன்று பேர் இருக்கையோ காலியாக இருந்தால் சன்னலோரம் உட்கார்ந்து கொண்டு சற்றே ஆசுவாசமாய் கைகால்களை நீட்டி பயணம் செய்வது இயல்பானதுதான். நமது இருக்கைக்கு புதிய பயணி யாரும் வந்தால் நம்மை சரிசெய்து கொண்டு அவரும் ஓரளவு வசதியாக அமர (ஆமாம் இப்போதெல்லாம் இருவர் இருக்கையோ மூவர் இருக்கையோ ஓரளவு வசதியாகத்தான் பயணம் செய்ய முடிகிறது) அல்லது நாம் சிறிது அசந்திருந்தாலும் ஒரு குறல் அல்லது ஒரு தொடுதலில் நம்மை சுதாரித்துக்கொண்டு இடம் அளிப்போம். இதுவும் இயல்பான ஒன்றுதான். ஹலோ!இதோ மேட்டருக்கு வந்துட்டேன். நேற்று ஒரு நகர பேருந்தில் ஏறினேன்"சுமார் 18 கிலோமீட்டர் பயணம். ஏறியவுடன் ஒரு கழுகு பார்வையில் இரண்டு இருக்கைகளில் ஒவ்வொருவர் அமர்திருக்க அதில் ஒரு இருக்கையை தேர்வு செய்து அமர்ந்தேன். ஏற்கனவே இருந்த பயணி விழித்தி