திங்கள், 18 ஏப்ரல், 2016

நூறு சதம்.

நூறு சதம்,
நூறு சதம்
என்று திரும்பிய பக்கமெல்லாம்
பார்க்க கேட்க முடிகிறது.
தேர்தல்ஆணையம் நிறைய
மெனக்கெடுகிறது ,
பொதுமக்களை விடுங்கள்,
கட்சி தீவிரவாதிகள்,அபிமானிகள்,
வேட்பாளரின் உறவு,நட்பு என்றும்
அரசியல் ஆர்வம் இல்லாதவர்கள்,
அரசியல் சாக்கடை என்று ஒதுங்கும்
ஆசாரசீலர்கள்,இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களிடம் பணம்
வாங்கிவிட்டோமே என்று தயங்கும்
மனசாட்சி உள்ளவர்கள் என்று பலவிதம்.
ஆனால்....
தேர்தல்பணி புரியும் அலுவலர்கள் நூறு சதம் வாக்களிப்பதை முதலில் உறுதி செய்தால் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக